ஜேர்மனிய அரசாங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு ஒருதொகை நூல்கள் அன்பளிப்பு.
கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்திலுள்ள ஜேர்மன் கலாச்சார நிலையமானது யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான வைபவம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றபோது அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை ஜேர்மனிய கலாச்சார நிலையப் பணிப்பாளர் பிஜோன்; கெட்டல்ஸ் இடமிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக் கொண்டார். மேற்படி நூல்களில் இலக்கியம் கலாச்சாரம் தத்துவம் போன்ற விடயதானங்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்ளடங்கியுள்ளமை விசேட அம்சம் என்பதுடன் இந்நூல்களின் மொத்தப் பெறுமதி இரண்டாயிரம் யூரோக்களாகும்.
இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஜேர்மனிய கலாச்சார நிலையப் பணிப்பாளர் பிஜோன்; கெட்டல்ஸ் பிரசித்திபெற்ற யாழ்.பொது நூலகத்திற்கு நூல்களை வழங்குவதில் ஜேர்மன் அரசின் சார்பாக தமது மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen