Samstag, 29. Januar 2011

http://www.athirady.info/?p=152371&sess=49fbb68b459fdca30e29abd9d4a28e2c

டக்ளஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது… // உப்புக்கல்லை வைரமென்று நம்பி கெடப்போகும் தமிழ்மக்கள்…

By athirady • January 29, 2011

டக்ளஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது…

என்னதான் சொன்னாலும் ரீவடையினராகிய நாங்கள் சொல்கிற விடயங்கள் சரியாக நடைபெறுகின்றது என்பதில் எங்களுக்கு ஆச்சரியம். டக்ளஸின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டதற்கு போட்டியிடும் கட்சியின் பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதில் நாங்கள் என்ன சொல்லி வந்திருக்கிறோம். டக்ளசோடு இருக்கிற ஆட்கள் டக்ளசின் பணத்திற்காக வேலை செய்பவர்கள் என்று

உண்மைதான். பெயரைக்கூட சரிபார்க்க முடியாதவாறு டக்ளசின் ஆட்கள் இருப்பதே வெட்கத்திற்குரியது. பணத்தால் கட்சிக்கு ஆட்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் புத்திசாலிகளாக அவர்கள் இருக்கிறார்களா என்பதே கேள்வி. இணக்க அரசியலில் எமக்கு உடன்பாடு இருக்கிறது. ஆனால் அரசியல் தந்திரோபாயம் என்பது டக்ளசிடம் இல்லை என்பதே எமது கருத்து.

எல்லா உதவிகளையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு தனியொரு கட்சியாக செயற்படுவது ஆபத்தானது என்பதை டக்ளஸ் உணர்ந்து கொள்ளவேண்டும். டக்ளஸ் தனது சொந்தப்பணத்திலிருந்து மக்களுக்கு உதவி செய்வது என்பதற்கும் அமைச்சராக இருந்து கொண்டு அரசின் உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டு டக்ளஸ் தானே அதனை செய்வது போல பிலிம் காட்டினால் அரசு சும்மா இருக்குமா என்பதை டக்ளஸ் யோசிக்க வேண்டும். எப்போது வெற்றிலைச்சின்னத்தில் டக்ளஸ் போட்டியிடுமாறு நிர்பந்திக்கப்பட்டாரோ அன்றே அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினமா செய்து தனித்து வீணைச்சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டியிருக்க வேண்டும்.

இந்த செப்படி வித்தைகள் தெரிந்த படியால் கருணா தமிழ் மக்கள் விடுதலைப்பலிகளிலிருந்து விலகி சுதந்திரக்கட்சியில் சேர்ந்து இருப்பை தக்க வைத்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற அவசியம் கருணாவிற்கு இல்லை. நியமன எம்பியாக இருந்து விட்டுப்போகலாம். டக்ளஸ் அரசியல் சாணக்கியங்களை புரிந்து கொள்ளாமல் போய்விட்டதன் பலனை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார் என வேட்பு மனு நிராகரிப்பு எடுத்துக்காட்டுகிறது.

உப்புக்கல்லை வைரமென்று நம்பி கெடப்போகும் தமிழ்மக்கள்…

உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என கிளிஜோசியர் ஒருவர் கிளியை கொண்டு சாத்திரம் சொல்லியிருக்கிறார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இயங்கிய ஆனந்தசங்கரி ஐயாவையே உள்ள கொண்டு வந்தபின் தமிழ்த்தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு எதிராக இயங்கக்கூடியவர் டக்ளஸ் ஒருவர்தான் இருக்கிறார். அவரையும் அரசின்ர ஆள் என்று சொல்லி அமத்தி விடலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழ்த்தேசிய தந்திரமைப்பு என சொல்வது சாலச்சிறந்தது. அதில் இருப்பவர்கள் எல்லாம் சுழியோடிகள். தங்கட தலைவர்களையெல்லாம் புலி கொன்று தின்று பசியாறிய பின் புலிகளின் கால்களில் போய் விழுந்து சரணாகதியான பிறவிகள். சூடு சொரணை எதுவுமில்லாதவர்கள். தமிழ்ச்சனமும் என்ன கன்றாவிக்கு இதுகளை ஆதரிக்கிறதுகளோ தெரியவில்லை.

தனியாக விடப்பட்ட சிவாஜிலிங்கத்திற்கு வல்வெட்டித்துறையை காட்டி உள்ள இழுத்துவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இனி வெளியில் உள்ள டக்ளசை ஈசியாக விழுத்திவிடலாம். எல்லாம் விண்ணாதி விண்ணனான சுரெஸ் பிரமச்சந்திரனின் அட்வைஸ்படி நடைபெறுகிறது. தமிழ்த்தேசியக்ககூட்டமைப்புக்கு சம்பந்தருக்கு பிறகு தலைவராக சுரேசைப்போடலாம். மாவையெல்லாம் ரூம்போட்டு யோசிக்கிற ஆளில்லை. புலிக்கே தண்ணி காட்டி புலியோடு இருந்து உயிரைக்காப்பாற்றிய திறமை சுரெஸ் அளவிற்கு யாருக்கு வரும்?.

தமிழரங்கம் மட்டுமல்ல எந்தவொரு அரங்கமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு சவாலாக இனி வருவதெண்டால் .இந்த விண்ணாதி விண்ணன்களை சமாளிக்கிற தைரியத்துடனும் தந்திரோபாயத்துடனும் வரவேண்டும். டக்ளசால் அது முடியாது. டக்ளசுடன் இருப்பவர்களுக்கு அந்த ஆற்றல் கிடையாது. டக்ளசின் பணத்திற்காக சேர்ந்த கூட்டம் டக்ளசின் இருக்கிற கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுத்து விடுவதில் முன்னிற்கிறது. அரசியல் ஆளமை கிடையாது. இது தெரிஞ்சுதான் மகிந்த அரசு டக்ளசை யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிட அனுமதிப்பதில்லை.



கிரிமினல்கள், சுழியோடிகள், முடிச்சுமாரிகள், மொள்ளைமாரிகள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் தாராளமாக நிறைந்து கிடக்கிறார்கள். இவர்களையெல்லாம் பிரபாகரனால் மட்டும்தான் அடக்கி வைத்திருக்க முடிந்தது. தமிழ்ச்செல்வனிடம் அரசியல் வகுப்பெடுத்த பெருமை தமிழ்த்தேசியக்கூட்டமைக்கு மட்டுமே உரியது. புலிகளிடம் பாடங்கற்றவர்களுக்கு தமிழரங்கம் போன்ற அமைப்புக்களை உடைத்துவிடுவது ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல முறை கூட்டம் போட்டு பல யோசனைகளை முன்வைக்கிற அளவுக்கு வளர்ந்த தமிழரங்கம் உள்ளூராட்சித் தேர்தல் வரமுன்னரே கோமாவிற்கு போய்விட்டது.

அதனால்தான் சொல்கிறோம். தமிழர்களுக்கிடையே ஒற்றுமை வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை. வேண்டுமென்றால் கள்ளர்களின் கூட்டுகள் வரலாம். தமிழர்களை சின்னாபின்னப்படுத்த சிங்கள பேரினவாதம் கடுமையாக யோசிக்க வேண்டியதில்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை வளர்த்து விட்டாலே போதும். அதுவே தமிழம்மக்களுக்கான சவக்குழியை தோண்டும். இதுபொல்தான் புலிகள் இருந்தார்கள். தமிழ்மக்கள் அவர்களை வானளவு நம்பினார்கள். முள்ளிவாய்க்காலில்தான் தமிழர்களுக்கு புலிகளின் சுயரூபம் தெரிந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யோக்கியதை அடுத்த பொதுத்தேர்தலுக்கள் தெரிந்து விடும்.

நன்றி! டீவடை

Keine Kommentare:

Kommentar veröffentlichen