Samstag, 29. Januar 2011
http://www.athirady.info/?p=152371&sess=49fbb68b459fdca30e29abd9d4a28e2c
By athirady • January 29, 2011
டக்ளஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது…
என்னதான் சொன்னாலும் ரீவடையினராகிய நாங்கள் சொல்கிற விடயங்கள் சரியாக நடைபெறுகின்றது என்பதில் எங்களுக்கு ஆச்சரியம். டக்ளஸின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டதற்கு போட்டியிடும் கட்சியின் பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதில் நாங்கள் என்ன சொல்லி வந்திருக்கிறோம். டக்ளசோடு இருக்கிற ஆட்கள் டக்ளசின் பணத்திற்காக வேலை செய்பவர்கள் என்று
உண்மைதான். பெயரைக்கூட சரிபார்க்க முடியாதவாறு டக்ளசின் ஆட்கள் இருப்பதே வெட்கத்திற்குரியது. பணத்தால் கட்சிக்கு ஆட்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் புத்திசாலிகளாக அவர்கள் இருக்கிறார்களா என்பதே கேள்வி. இணக்க அரசியலில் எமக்கு உடன்பாடு இருக்கிறது. ஆனால் அரசியல் தந்திரோபாயம் என்பது டக்ளசிடம் இல்லை என்பதே எமது கருத்து.
எல்லா உதவிகளையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு தனியொரு கட்சியாக செயற்படுவது ஆபத்தானது என்பதை டக்ளஸ் உணர்ந்து கொள்ளவேண்டும். டக்ளஸ் தனது சொந்தப்பணத்திலிருந்து மக்களுக்கு உதவி செய்வது என்பதற்கும் அமைச்சராக இருந்து கொண்டு அரசின் உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டு டக்ளஸ் தானே அதனை செய்வது போல பிலிம் காட்டினால் அரசு சும்மா இருக்குமா என்பதை டக்ளஸ் யோசிக்க வேண்டும். எப்போது வெற்றிலைச்சின்னத்தில் டக்ளஸ் போட்டியிடுமாறு நிர்பந்திக்கப்பட்டாரோ அன்றே அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினமா செய்து தனித்து வீணைச்சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டியிருக்க வேண்டும்.
இந்த செப்படி வித்தைகள் தெரிந்த படியால் கருணா தமிழ் மக்கள் விடுதலைப்பலிகளிலிருந்து விலகி சுதந்திரக்கட்சியில் சேர்ந்து இருப்பை தக்க வைத்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற அவசியம் கருணாவிற்கு இல்லை. நியமன எம்பியாக இருந்து விட்டுப்போகலாம். டக்ளஸ் அரசியல் சாணக்கியங்களை புரிந்து கொள்ளாமல் போய்விட்டதன் பலனை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார் என வேட்பு மனு நிராகரிப்பு எடுத்துக்காட்டுகிறது.
உப்புக்கல்லை வைரமென்று நம்பி கெடப்போகும் தமிழ்மக்கள்…
உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என கிளிஜோசியர் ஒருவர் கிளியை கொண்டு சாத்திரம் சொல்லியிருக்கிறார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இயங்கிய ஆனந்தசங்கரி ஐயாவையே உள்ள கொண்டு வந்தபின் தமிழ்த்தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு எதிராக இயங்கக்கூடியவர் டக்ளஸ் ஒருவர்தான் இருக்கிறார். அவரையும் அரசின்ர ஆள் என்று சொல்லி அமத்தி விடலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழ்த்தேசிய தந்திரமைப்பு என சொல்வது சாலச்சிறந்தது. அதில் இருப்பவர்கள் எல்லாம் சுழியோடிகள். தங்கட தலைவர்களையெல்லாம் புலி கொன்று தின்று பசியாறிய பின் புலிகளின் கால்களில் போய் விழுந்து சரணாகதியான பிறவிகள். சூடு சொரணை எதுவுமில்லாதவர்கள். தமிழ்ச்சனமும் என்ன கன்றாவிக்கு இதுகளை ஆதரிக்கிறதுகளோ தெரியவில்லை.
தனியாக விடப்பட்ட சிவாஜிலிங்கத்திற்கு வல்வெட்டித்துறையை காட்டி உள்ள இழுத்துவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இனி வெளியில் உள்ள டக்ளசை ஈசியாக விழுத்திவிடலாம். எல்லாம் விண்ணாதி விண்ணனான சுரெஸ் பிரமச்சந்திரனின் அட்வைஸ்படி நடைபெறுகிறது. தமிழ்த்தேசியக்ககூட்டமைப்புக்கு சம்பந்தருக்கு பிறகு தலைவராக சுரேசைப்போடலாம். மாவையெல்லாம் ரூம்போட்டு யோசிக்கிற ஆளில்லை. புலிக்கே தண்ணி காட்டி புலியோடு இருந்து உயிரைக்காப்பாற்றிய திறமை சுரெஸ் அளவிற்கு யாருக்கு வரும்?.
தமிழரங்கம் மட்டுமல்ல எந்தவொரு அரங்கமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு சவாலாக இனி வருவதெண்டால் .இந்த விண்ணாதி விண்ணன்களை சமாளிக்கிற தைரியத்துடனும் தந்திரோபாயத்துடனும் வரவேண்டும். டக்ளசால் அது முடியாது. டக்ளசுடன் இருப்பவர்களுக்கு அந்த ஆற்றல் கிடையாது. டக்ளசின் பணத்திற்காக சேர்ந்த கூட்டம் டக்ளசின் இருக்கிற கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுத்து விடுவதில் முன்னிற்கிறது. அரசியல் ஆளமை கிடையாது. இது தெரிஞ்சுதான் மகிந்த அரசு டக்ளசை யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிட அனுமதிப்பதில்லை.
கிரிமினல்கள், சுழியோடிகள், முடிச்சுமாரிகள், மொள்ளைமாரிகள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் தாராளமாக நிறைந்து கிடக்கிறார்கள். இவர்களையெல்லாம் பிரபாகரனால் மட்டும்தான் அடக்கி வைத்திருக்க முடிந்தது. தமிழ்ச்செல்வனிடம் அரசியல் வகுப்பெடுத்த பெருமை தமிழ்த்தேசியக்கூட்டமைக்கு மட்டுமே உரியது. புலிகளிடம் பாடங்கற்றவர்களுக்கு தமிழரங்கம் போன்ற அமைப்புக்களை உடைத்துவிடுவது ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல முறை கூட்டம் போட்டு பல யோசனைகளை முன்வைக்கிற அளவுக்கு வளர்ந்த தமிழரங்கம் உள்ளூராட்சித் தேர்தல் வரமுன்னரே கோமாவிற்கு போய்விட்டது.
அதனால்தான் சொல்கிறோம். தமிழர்களுக்கிடையே ஒற்றுமை வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை. வேண்டுமென்றால் கள்ளர்களின் கூட்டுகள் வரலாம். தமிழர்களை சின்னாபின்னப்படுத்த சிங்கள பேரினவாதம் கடுமையாக யோசிக்க வேண்டியதில்லை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை வளர்த்து விட்டாலே போதும். அதுவே தமிழம்மக்களுக்கான சவக்குழியை தோண்டும். இதுபொல்தான் புலிகள் இருந்தார்கள். தமிழ்மக்கள் அவர்களை வானளவு நம்பினார்கள். முள்ளிவாய்க்காலில்தான் தமிழர்களுக்கு புலிகளின் சுயரூபம் தெரிந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யோக்கியதை அடுத்த பொதுத்தேர்தலுக்கள் தெரிந்து விடும்.
நன்றி! டீவடை
Sonntag, 23. Januar 2011
http://www.nerudal.com/nerudal.24650.html
அதிகம் பேச விரும்பாத – ஏன் பேசவே விரும்பாத – பேசி என்னதான் பயன் என்ற நிலையில் – இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக, ‘விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்’ என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம்.
இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சி பூர்வமான நிலையில் பதிவு செய்யப்பட்டது.
எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என்றாலும் நாம் பேச வேணும். நீங்கள் இப்போது எப்படி எல்லாவற்றையும் உணர்கிறீங்கள். அதாவது, கடந்த காலம் நிகழ்காலம் குறித்து….
ம். என்னத்தைச் சொல்ல. எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் சொல்ல வேணும் போல இருக்கு. ஆனால் அடுத்த கணமே ஒண்டும் முடியேல்லப் போலவும் இருக்கு. எல்லாமே குழப்பந்தான்.
இப்ப பிரச்சினைகள் கூடியிருக்கு. நாங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலைமை உருவாகியிருக்கு. ஆனால் இப்படியே காலம் உறைஞ்சு போயிருக்காது. நாளைக்கு இப்ப இருக்கிற நிலைமை இருக்காது. இன்னொரு மாதிரியான நிலைமை வரும். அது முந்தியைப் போலத்தான் இருக்கும் எண்டில்லை.
இப்ப இருக்கிற இந்த நிலைமையை யாராவது நினைச்சிருப்பமா? அப்பிடித்தான் நாளைக்கு இன்னொரு நிலைமை வரும் எண்டு நம்பிறன் வரலாறு எப்பவும் தேங்குவதில்லை. அது பின்னோக்கியும் பாய்வதில்லை எண்டு சொல்லுவார்கள்.
இது எனக்கு மட்டும் தெரியிற ஒரு பிரச்சினையெண்டு நான் நினைக்கேல்ல. அல்லது எங்களைப் போல ஒரு நிலைமையில இருக்கிற ஆக்களின்ர பிச்சினை எண்டும் நான் பாக்கேல்ல.
பொதுவாகச் சொல்லிறதெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல எண்டுதான் எங்களின்ரை நிலைமையைச் சொல்ல வேணும். கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது எண்டு சொல்லுவினம். நாங்கள் காட்டில கைவிடப்படேல்லை. முள்ளுக்கு மேல நெருப்பைப் பரவி விட்டு, அதுக்கு மேல நிக்கச் சொன்னதைப் போல இப்ப இருக்கிறம்.
இதில கடந்த காலம் – நிகழ்காலம் எண்டு என்ன இருக்கு? ஆனா ஒண்டு மட்டும் உண்மை, நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்.
இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு.
நான் இப்ப அதைப் பற்றியெல்லாம் கதைக்க விரும்பேல்ல. அதைக் கதைக்கிறதால எனக்குத்தான் இப்ப பிரச்சினை. ஆனால், இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.
என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு படிப்பினைதான். ஆனால், மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்.
நாங்கள் பட்ட கஸ்ரங்களுக்கான பயன் கிடைக்கயில்லை எண்டதும் சனங்களின்ரை சாவு அநியாயமாகப் போயிட்டுது எண்டுந்தான் எனக்குக் கவலை. மற்றப்படி நான் என்னைப் பற்றிக் கவலைப்படேல்ல. எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலயும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலயும் வளர்த்தெடுத்த அமைப்பின்ர தோல்வியைத் தாங்க முடியாது.
என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில இருந்த வேறுபாட்டைச் சரியாகக் கணக்கெடுக்கத் தவறியிட்டம் எண்டுதான் சொல்லுவன்.
அப்படியென்றால், அதை விளக்க முடியுமா? வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை எப்படிப் புரிந்திருக்க வேணும்?
தோல்வியில் கிடைக்கிற அனுபவங்கள் வேற. வெற்றியில கிடைக்கிற அனுபவங்கள் வேற. போராட்டத்தில ஒரு போதும் தோல்வி எண்ட சொல்லையே பாவிக்கக்கூடாது. அதைப் பின்னடைவு எண்டுதான் சொல்ல வேணும். அப்ப, பின்னடைவில நாங்கள் ஒரு நெருக்கடியைச் சந்திப்பம். அந்த நெருக்கடியில இருந்து மீளுறதுக்காக எல்லாரும் ஒண்டாக நிற்பினம்.
ஆனால வெற்றியில ஆளாளுக்குப் போட்டி வந்திடும். பங்கைப் பகிர்வதில், சுகங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறதில போட்டிகள் வரும். இந்தப் போட்டியில இடைவெளிகளும் பகைமையும் தானாகவே வரும்.
இதை என்ரை கண்ணால பார்த்திருக்கிறன்.
இது உள்ளுக்குள்ளை எண்டால், வெளியில வெற்றியின் போது வாற வாய்ப்புகளையும் தொடர்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் சரிவரப்பயன்படுத்தியிருக்கலாம். இதுக்கு ஒரு நிதானம் இருந்திருக்க வேணும். ஆனால், இதெல்லாம் ஏன் இடையில பிழைச்சு கெட்டுப் போனதெண்டு தெரியேல்ல.
இறுப்போர் நடந்த போது என்ன செய்தீர்கள்? நீங்கள் இறுதி வரையிலும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர் என்ற வகையில் அந்த நாட்களை – அந்தக் கணங்களை எப்படி உணர்ந்தீர்கள்?
இதைப் பற்றி நான் கதைக்க விரும்பேல்ல. ஏனெண்டால் இதைப் பற்றி நாங்கள் சரணடைந்த பிறகு எங்களை விசாரித்த படைத்தரப்பிடம் சொல்லியாச்சு. இனி நான் வேற இடங்களில கதைச்சு வேற பிரச்சினைகளை உருவாக்க விரும்பேல்ல. பொதுவாகச் சொல்லிறதெண்டால் இதைப் பற்றிக் கதைக்காமல் விடுறதுதான் நல்லது.
ஆனால் எங்கட தலைவிதியைப் பாத்தீங்களா? நாங்கள் ஆரிட்டை எதையெல்லாம் சொல்லக் கூடாது எண்டு நினைத்தமோ அதையெல்லாம் அவங்களிட்ட சொல்ல வேண்டிய நிலையொண்டு வந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் அதை ஏற்றுக் கொண்டுதான் வாழுறன்.
கடைசி நாட்களில் சாவதா சரணடைவதா எண்ட போராட்டம் எனக்கு வந்தது. என்னை மாதிரித்தான் பல ஆயிரக்கணக்கான போராளிகள் அந்த வெட்டையில – கொதிக்கிற மணற் குவியல்களுக்கு மேல நிண்டார்கள்.
ஒருவராலயும் ஒரு முடிவையும் எடுக்கேலாமல் இருந்திது. பிறகு நடக்கிறது நடக்கட்டும் எண்டு சனங்களோட ஆமியிட்ட போனதுதான். ஆனால், அப்பிடிப் போகேக்க இருந்த மன நிலையைச் சொல்லேலாது. அது பெரிய கொடுமை.
பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு, என்ன செய்யிறது, என்ன நடக்கப் போகுது எண்டு தெரியாமல் வெறுங்கையோட எதிர்த்தரப்பிட்டப் போறதை எப்பிடிச் சொல்ல முடியும்?
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதிரியை அழிப்பது அல்லது எதிரியிடம் சிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற மரபைக் கொண்டவர்கள். சயனைட் என்ற ஒரு விசயமே புலிகளினால்தான் தமிழ்ச் சூழலில் பிரபலமாக்கப்பட்டது. புலிகளின் சிறப்பு அடையாளங்களில் சயனைட் ஒன்று. இந்த நிலையில் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எதிர்த்தரப்பின் கைகளில் சிக்காமல் சரணடையும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?
இது தனியே நான் எடுத்த முடிவோ, எனக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு பிரச்சினையோ இல்லை. அப்படி எண்டால்தான் நீங்கள் என்னை இப்பிடிக் கேட்க முடியும். இது பல ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சினை. அதிலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை.
என்னைப் பொறுத்தவரை இந்த நிலைமை யாரும் எதிர்பார்த்திருக்காத ஒரு பிரச்சினை எண்டுதான் சொல்லுவன். எதிரிகள் கூட இப்படியொரு நிலையில் புலிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அதைப்போலவே இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கதைப்பதும் ஒரு எதிர்பாராத நிலைமைதான்.
நாங்கள் எதிர்பாராமல் சரணடைய வேண்டி வந்ததைப் போலவே சயனைற் கடிக்காமல் விட்டதும் ஒரு எதிர்பாராத விசயந்தான்.
ஆனால் இதே இடத்தில நான் ஒரு விசயத்தையும் சொல்ல வேணும். நாங்கள் ஏன் சயனைட் குடித்திருக்க வேணும் எண்டு எதிர்பார்க்கிறியள்? அல்லது அங்கே சயனைற் கடிக்காமல் விட்டதைத் தவறாகப் பாக்கிறீங்களா?
இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் – எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது. ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதிர்பார்ப்பும் இருந்தன.
ஆனால், அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு – எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்?
ஒருக்கா நீங்கள் அந்தக் காட்சியை நினைச்சுப் பாருங்கள். இறுதிப் போரில சரணடைந்த 13000 ஆயிரம் பேரும் சயனைற்றைக் கடித்துச் செத்திருந்தால் அந்தப் பிரதேசம் முழுக்கவும் பிணக்காடாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அதால ஆருக்குத்தான் என்ன லாபம். அப்பவும் எதிர்த்தரப்புத்தான் சந்தோசப்பட்டிருக்கும்.
ஆனால், பிறகு நான் பல தடவை அங்க அப்ப சயனைட்டைக் கடிக்காமல் விட்டதுக்காகக் கவலைப்பட்டிருக்கிறன்.
இருக்கும் வரையும் சரியாகவும் விசுவாசமாகவும் இயங்கினம். எல்லாம் கையை மீறிப் போனாப் பிறகு வீம்புக்கு செத்து மடியிறதால என்ன பலன்? நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், போர் முடியும் போது மிஞ்சியிருந்த அத்தனை போராளிகளும் செத்திருந்தாலும் என்ன நடந்திருக்கும்? சாவுதான். பிணக்குவியலாக அப்பிடியே செத்துத்தானிருப்பம்.
ஒரு சாவின் மூலம் மக்களுக்கும் தாய் மண்ணுக்கும் ஏதாவது கிடைக்கும் என்றால், நானோ அல்லது மற்றப் போராளிகளுமோ செத்திருக்கலாம். அது வீரச்சாவாகவும் கருதப்பட்டிருக்கும்.
ஆனால், அதுக்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லாமலே நாங்கள் சரணடைய வேண்டி வந்தது. பிறகென்ன, கைதியாக்கினார்கள். கைதி எண்டால் அவர்களுடைய கட்டுப்பாட்டில், அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச் செய்யும் நிலைதான் இருந்தது. இப்பவும் ஏறக்குறைய அதே நிலைமைதான்.
இப்ப வெளியாலே விடப்பட்டிருக்கிறம். இது பேரளவிலதான். ஆனால் சுயாதீனமாக நாங்கள் வாழ முடியேல்ல. நாங்கள் முயன்றாலும் சூழல் அதுக்கு முழுக்க இடந்தராது. சிலவேளை சிலபேருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை மாதிரித் தெரியாமலிருக்கலாம். அவையள் எந்தச் சூழலுக்கையும் வாழக்கூடியமாதிரி தங்களை மாத்தியும் கொள்ளலாம்.
ஆனால் என்னால அங்காலயும் போக முடியவில்லை. இங்காலையும் போக முடியேல்ல. ஏதோ மனதுக்குள்ள கிடந்து உருட்டிக் கொண்டிருக்கு. நாங்கள் எங்கேயோ பிழைவிட்டிருக்கிறம். கனக்கப் பிழையள். அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினை.
நாங்கள் பிடிபட்டுக் காம்பில இருக்கேக்க இதை உணர்ந்திருக்கிறன். பலரிட்டயும் இந்த மாதிரியான ஒரு, ஒரு நிலைமையைப் பாத்திருக்கிறன். பொதுவாகக் கனபேர் கவலைப்பட்டார்கள்.
நாங்கள் கன இடத்தில பிழை விட்டிட்டம் எண்டதை வாய்விட்டே சொன்னார்கள். ஆனால் இனிப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போக முடியாது. ஆனால் நாங்கள் இப்பிடியே இருக்கவும் ஏலாது. இதைத்தான் நான் திரும்ப திரும்பச் சொல்லுவன்.
சரணடைந்தபோதே எங்களுக்குத் தெரியும், நாங்கள் விரும்பாத ஒரு இடத்துக்குத்தான் கொண்டு போகப் போறாங்கள் எண்டு நினைச்சம். அப்பிடியே நடந்தது, போராட்டத்தின்ர தோல்வியே நாங்கள் விரும்பாத ஒரு இடந்தானே. அதாவது, அப்படியான நிலைமை எண்டது நாங்கள் விரும்பாத – நாங்கள் எதிர்பார்க்காத, நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைதானே.
பிறகு இடைக்கிடை விசாரணைகள். தேவையில்லாத சந்தேகங்கள். எப்பவும் என்னை யாரோ கண்காணிக்கிற மாதிரி ஒரு உணர்வு. இதுதான் அடுத்த பெரிய பிரச்சினை.
இப்பிடியே எல்லாப் பக்கத்தாலையும் வதைபடுகிறதை விட சாகலாம். அல்லது இந்த நாட்டை விட்டே எங்காவது தொலைஞ்சு போகலாம்.
பழைய இடங்களையும் தெரிஞ்ச சனங்களையும் பாக்க எப்பிடியிருக்கும் எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்.
சரி, என்ன மாதிரியான பிழைகள் நடந்திருக்கு? அதை எப்படிச் சீர்ப்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.
ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?
இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் – இதையெல்லாம் எழுதக் கூடும்.
என்னைப் பொறுத்தவரையும் நான் விசுவாசமாக வேலை செய்திருக்கிறன். சனத்துக்காகப் பாடு பட்டிருக்கிறன். இயக்கத்துக்காகவும் பாடுபட்டிருக்கிறன். போராட்டத்துக்காக உழைச்சிருக்கிறன். சில சந்தர்ப்பங்களில என்ரை அறிவைக் கடந்தும் வேலை செய்திருக்கிறன். ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.
தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால், அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்.
நாங்கள் எல்லாத்தையும் பட்டுக் கழிச்சிட்டம். இறுதிவரையும் நிண்டு பாத்தாச்சு. என்னைப் போல ஆயிரக்கணக்கானவையள் இப்பிடிக் கடுமையாகக் கஸ்ரப்பட்டிருக்கிறார்கள். இதுக்கு மேல நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால் எங்களுக்குத்தான் இப்பவும் கஸ்ரம். எங்களால கண்டபடி அங்க இங்க திரிஞ்சு நிலைமைக்குத் தக்கமாதிரிப் பாடவும் முடியாது. காரியம் பாக்கவும் முடியாது.
இயக்கம் எண்டது பெரிய மரத்தைப் போல. அது சரிந்தால் சும்மா கயிற்றைப் போட்டுக் கட்டி நிற்பாட்டேலாது. அதைப் போல அந்த மரம் இல்லாட்டித்தான் அதின்ரை அருமையும் அது இருந்த இடமும் தெரியும். வெட்ட வெளியாக இருக்கிற இடத்தைப் பாத்தால் இனம் புரியாத ஒரு சோகம் மனசில வருகிது.
இந்த நிலைமை – அதாவது, புலிகளின் வீழ்ச்சியும் நீங்கள் சரணடைந்ததும், பிறகு இப்போது விடுதலையாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைப் பற்றியும் என்ன நினைக்கிறீங்கள்?
இதைத் தானே நான் முன்னரே சொல்லிவிட்டன். நாங்கள் விரும்பாத ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறம் எண்டு. இப்பிடியான நிலைமைக்குப் பிறகு ஒரு காலகட்டம் வரையில நீரோட்டத்தில போக வேண்டியதுதான்.
நீந்தேக்க களைச்சுப் போனால், கொஞ்சநேரம் நீரோட்டத்தின்ர போக்கில போய்ப் பிறகு திரும்பிற விளையாட்டுத்தான்.
ஆனால், இது நிலைப்பாட்டின் வீழ்ச்சியாக மாறாதா?
அப்ப என்ன செய்யிறது? எதையும் சொல்லலாம். செய்து பாத்தாத்தான் தெரியும் எண்டு சொல்லுவார்கள். அதைமாதிரி, நாங்கள் இருக்கிற சூழ்நிலையில இப்ப பேசாமல் இருக்கிறதே மேல். தொழில், வருமானம், வீடு, பிள்ளைகளின்ர எதிர்காலம் எண்டு எங்களுக்கு முன்னாலே ஏராளம் பிரச்சினைகளிருக்கு.
இதையெல்லாம் இந்த வயதில எப்பிடிச் செய்து முடிக்கிறது எண்டு தெரியேல்ல. எல்லாத்தையும் தொடக்கத்தில இருந்து செய்ய வேணும் எண்டால் எவ்வளவு கஸ்ரம்?
22 வருசமாக பொது வாழ்வில இருந்திட்டு இப்ப இப்படித் திடீரெண்டு தனியாகக் குடும்ப வாழ்க்கைக்கு வாறதே சிரமம். உழைக்க வேண்டிய உற்சாகமான காலத்தை – இளமைக்காலத்தை இழந்திட்டு இப்ப புதிசா என்ன செய்யலாம் எண்டால் என்ன செய்யிறது?
நானாவது பரவாயில்ல. கால் இல்லாதவங்கள், கையில்லாதவங்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
இந்த நிலைமையில நாங்கள் என்ன செய்யிறது?
எங்க இருந்தாலும் இதயம் நல்லா இருந்தாச் சரி எண்டதுதான் என்ர நிலைப்பாடு.
அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கு? விடுதலையாகிய போராளிகளின் பொதுவான நிலைமையைப் பற்றிச் சொல்லுங்கள்.
அரசாங்கம் கடன் தாறதாகச் சொல்லியிருக்கு. ஐ.ஓ.எம் எண்ட ஒரு தொண்டு நிறுவனம் தொழில் உபகரணங்களைத் தருகிது. அதுக்கு மேல நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. அப்படி எதிர்பார்க்கிறதில பிரயோசனமும் இல்ல.
புனர்வாழ்வில சிலபேருக்கு நல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. சிலருக்கு தொழில் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. குறிப்பாக இளைய பெடியள். அல்லது பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகளில் இடம் குடுக்கிறார்கள். அவர்களின்ர வயது அதுக்குத் தோதாக இருக்கு.
எங்களுக்கு வயதும் கூடீட்டுது. படிப்பும் போதாது. படிக்கிற ஆக்களுக்கும் பரவாயில்ல. ஆகப் பாதிக்கபபட்டது எங்களைப் போல இருக்கிற ஆக்கள்தான்.
இப்போதுள்ள உங்களின் மன நிலை என்ன?
இப்பிடியொரு கேள்வியை விசாரணையின்போதும் கேட்டார்கள். இப்ப நீங்களும் கேக்கிறியள். இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்?
பொதுவாகவே போராளிகளின் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.
வசதி வாய்புள்ள ஆக்களுக்கு ஒரளவு பிரச்சினை இல்ல. சிலர் வெளியில போயிட்டினம். மற்ற ஆக்கள் சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். சிலருக்கு சொந்தக்காரர் நண்பர்களின் உதவி இருக்கு.
ஆனால், பலருக்கும் வசதிகள் இல்லை. உதவிகள் இல்லை. சிலருக்கு சில இடங்களில் இருந்து உதவிகள் கிடைச்சிருக்கு. அவர்கள் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஏதாவது செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான போராளிகள் வேதனையோட இருக்கிறார்கள். அரசாங்கத்தின்ர கடனைப் பெற்றாலும் அதை வைச்சுத் தொழில் செய்யக்கூடிய நிலைமை எல்லாருக்கும் இல்லை.
பொதுவாகச் சொன்னால் இதுக்கு ஒரு ஒழுங்கான திட்டம் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்.
பெண்போராளிகளின் நிலைமை எப்பிடி இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடித்திருக்கும் பெண் போராளிகளின் நிலைமை?
அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரும்பாலும் இந்த மாதிரிப் பெண் போராளிகள் ஆண் போராளிகளையே திருமணம் செய்திருந்தினம். இப்ப அவர்களில் பலரும் இல்லை. பலர் ஏற்கனவே வீரச்சாவடைந்து விட்டார்கள். சிலரைப் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில இந்தப் பெண் போராளிகள் பிள்ளைகளோடு பெரிய கஸ்ரங்களைப் படுகுதுகள்.
அதுதான் சொன்னேனே, ஒரு நல்ல திட்டம் இல்லை எண்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?
இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.
இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.
நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனா, இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.
ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?
முன்னாள் போராளி – இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.
போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது – இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.
மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.
நேர்காணல்: ஆதித்தன்
நன்றி: பொங்குதமிழ்
555555555
(12 கருத்துக்கள்) “சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது…அது பெரிய கொடுமை…! – நெஞ்சை நெருடும் ஒரு நேர்காணல்”
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.
kulakotan wrote on 21 January, 2011, 22:57
கலங்காதே,காலம் வரும்.அதுவரை உன் சந்ததி பெருக்கு?அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு |||||||||||
sasitharan wrote on 22 January, 2011, 1:35
மனம் தளராது தேவன் ஜேசு உங்களுக்கும் உதவுவர் உறுதிஜுடன் கேளுங்கள்
tamilselvan wrote on 22 January, 2011, 8:09
தோழரே தையிரியம் நம்பிக்கை உம்முடைய பதில்களில் தெரிகிறது போராளி போராளிதான் எப்போதும் உலகம் உள்ளவரை வெல்லட்டும் தமிழர் போராட்டம்
puvana wrote on 22 January, 2011, 10:53
என்றோ ஓர் நாள் நல்ல காலம் வரும் கலங்காதே மனமே காலம் ஜாருக்கவும் நின்றுவிடாது துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும் எதுவும் முடிந்து விட்டது என்று கலநேகத்தே
c.kumar wrote on 22 January, 2011, 13:19
கலங்காதே காலம் கனியும் காத்திரு தோழரே இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நம் தமிழீழ தேசியக்கொடி பறக்கும் நம் தமிழீழ மண்ணில்.நாளை என்பது நமதாக இருக்கட்டும்.
arul wrote on 22 January, 2011, 13:47
அண்ணா உன்னை பார்த்து நன் தமிழன் என்று சொல்வேன் தலை நிமிர்ந்து நிற்பேன்
siva wrote on 22 January, 2011, 15:16
தியாக பயணம் திசை மாறி மாவீரர் கனவினை வெளிநாட்டு பணத்திற்கும் பிரபல்யதிட்கும் விற்க நினைத்த நவீன விடுதலைபுலி கொள்கைக்கு kidaitha பரிசு அப்பாவி அடி மட்ட போராளிகளும் மக்களும் பாதிக்கப்பட்டனர் இனியாவது புலம்பெயர் மக்கள் உங்களின் வெளிநாட்டு இருபிட்க்காக அப்பாவி இளையோரை விட்கதீர்
puthiya thalaimai varum wrote on 22 January, 2011, 17:43
அப்போ நம்ம தலைவரும் சரணடைந்தார் என்று சொல்கிறார் அண்ணா. இதுக்கு பிற்பாடும் ஏன் தலைவருக்கு வீர வணக்கம் செலுத்தவில்லை . சரணடைந்து கொல்லபட்டார் என்று அவமதிகிரார்களா . தற்கால புலிகள் இதுல ஒரு சதி உள்ள இருந்தே கிளம்பினமாதிரில்லோ கிடக்கு . உண்மை வெளிவரும் என்கிறீர்கள் ஆமா எப்போ வரும் நாங்களும் செத்த பிறகா ? போங்கடா . துரோகிகளா !! கூட இருந்தே குழி பறிச்ச தொரோகிகளே ! அண்ணா உங்கள் மேல எமக்கு கோபம் இல்ல . நீங்கள் ஓய்வு எடுத்துகொள்ளுங்கள் . புதிய தலைமை வரும்
mortin wrote on 22 January, 2011, 19:26
காலத்தில் உங்களின் நீங்கள் சிந்திய ரத்தமும்…இங்கே நாங்கள் சிந்திய கண்ணீரும் உரமாகி சுதந்திர தமிழீழம் நிச்சயமாய் உருவாகும்,இதை விட பின்னடைவு என்பது எதுவும் இல்லை,இதைவிட பெரிய துரோகங்களை நாம் சந்திக்கபோவதும் இல்லை,நன்றாக சொன்னீர்கள்,வரலாறு என்றுமே பின்னோக்கி செல்வது இல்லை,இது தீர்க்க தரிசனமானா உண்மை…சுதந்திர தமிழீழம் மலர்வதை தடுத்திட இனி எந்த சக்தியும் இல்லை இந்த உலகத்தில்..மாவீரர்கள் வழிநடத்த தேசியத்தலைவர் களம் அமைக்க,இனி ஒருநாளும் நாம் தோற்ப்பதில்லை இது உறுதி….உறுதி
ravanan padai the liberation of tamil force wrote on 23 January, 2011, 6:30
தலைவர் இறந்துவிட்டார் என்று புதினம் .கொம் ல எழுதியவர்கள் விடுதலைபுலிகளின் வழுதி என்பவர் முன்னால் சென்றவர்களின் பின்னால் சென்றவரின் வழியில் ஈழ போராட்டம் என்று இருக்கும் தலைவர் பிரபாகரன் நூறுவீதம் உயிருடனில்லை தமிழினமே ஏமாறாதே அஞ்சலி செலுத்து எம் தலைவனுக்கு . வீரனுக்கு ஒருமுறைதான் மரணம் கோளைக்கோ பலமுறை மரணம் . தேசிய தலைவர் உயிருடனில்லை . பாவம் அவருக்கு அஞ்சலி செலுத்துங்கள் அவரை அவமதிக்காதீர்கள் . இராவணன் படை வருவோம் வருவோம் மிகவிரைவில்
ravanan padai the liberation of tamil force wrote on 23 January, 2011, 6:38
விடுதலைப்புலிகள் இன்னும் பலமுடன் இருக்கிறார்கள் அவர்களை அழிக்க முடியாது . வருவார்கள் திரும்பவும் தளபதி பொட்டு அம்மன் உயிருடன் பத்திரமாக உள்ளார் . தமிழ் மக்களின் ஆதரவு உள்ளவரை தமிழீழ கனவு கலையாது . தலைவரின் வழியில் சரித்திரம் படைப்போம் வாருங்கள்
magesh wrote on 23 January, 2011, 8:15
தோல்வி ஒன்றும் முடிவல்ல அது நம் தவறுகளின் தொடக்கமே.. அதை திருத்திக்கொண்டு, மீண்டும் நம் மன உருக்களை உண்மையக்குவோம்
தமிழனே………….நிச்சயம் வெல்வோம்
ஒருநாள் ……………….
இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்
உங்கள் பெயர் (அவசியம்)
மின்னஞ்சல் முகவரி (அவசியம்)
Dienstag, 30. November 2010
‘மாவீரர் தினவிழா’
அன்பான புலம்பெயர் தமிழர்களே! ‘மாவீரர் தினவிழா’ க்கு அணிதிரண்டு வாருங்கள் ‘மகா நிதி’ கொண்டு வாருங்கள்!!
அன்பான புலம்பெயர் தமிழர்களே! ‘மாவீரர் தினவிழா’ க்கு அணிதிரண்டு வாருங்கள் ‘மகா நிதி’ கொண்டு வாருங்கள்!!
மாளடித்த பிள்ளைகளை வைத்து மாவீரர் தினவிழா என்ற பெயரில், மகா மண்டபம் ஒன்றெடுத்து மக்களை அழைத்து மாகா கலக்சன் கண்ட ருசிகாரர் இந்த வருடமும் அவ் விழாவை செய்ய போகிறார்களாம் என ஈ-மெயில்கள் மூலம் அனுப்பிகொண்டிருக்கிறார்கள். உங்கள் யாபேரின் வீடுகளுக்கும் ஈ.மெயில் அனுப்பியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். நீங்களும் வாசித்திருப்பீர்கள். நிறைய வைரஸ் காகித புலிகள் நிறைந்துவிட்டார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதம் புலிகளும், புலித்தலைவரும் மாண்டுபோன பின்பு தலைவர் இருக்கிறார், தலைவர் வருவார், என மடமைகளாய் ஆக்கி வைத்திருந்த தமிழர்களை ஏமாற்றி பிழைத்த புலிப்பினாமி கூட்டங்கள் மாவீரர் விழா மாதம் வந்தவுடன் மீண்டும் புற்றீச்சலாய் புறப்பட்டு விட்டார்கள். முன்னர் போல் வீடுகளுக்கு வந்து நேரடியாக காசு கேட்க வரப்பயந்து இந்த மாவீரர் தினவிழாவை பயன்படுத்தியாவது கொத்துரொட்டி, வடை, தோசை, அப்பம் போன்ற இத்தியாதிகளை விற்று பிழைப்பதற்கு கடை போட மீண்டும் முனைகிறார்கள்.
தலைவர் இருந்த காலத்தில் உங்களுக்கு தெரியும், வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான அமைப்புகள் (புனர்வாழ்வு கழகம், பேரவை, ஊரவை, மக்களவை, கோயில்) என ஊருப்பட்ட பெயரில் ஊருபட்ட ஆக்கள் எதாவது ஒரு பெயரில் அமைப்புகள் அமைத்து வைத்திருந்து தமிழர்களை ஏமாற்றி காசு பிழைப்பு நடத்தியவர்கள். 2009 ஆம் ஆண்டு nஐனவரியில் தொடங்கி மே மாதம் 18வரை ஒட்டுமொத்த தமிழனிடமும் 1லட்சம் பிறாங் வங்கியில் கடனெடுத்து தாங்கோ என்று சொல்லி ஊருப்பட்ட பேரிடம் காசை வாங்கிக்கிகொண்டு அவர்களுக்கு டாட்டா காட்டி ஆப்பு வைத்துவிட்டு போனவர்கள்.
புலிகளுக்கு என்று காசு சேர்த்தவங்களும், காசுவாங்கியவங்களும் வெளிநாடுகளில் கார்;, கடைகள், வீடுகள், என வசதியாக வாழ்கிறார்கள். காசு கடன் எடுத்துகொடுத்தவர்களில் பல பேர் இப்போ சிரிக்கக்கூட முடியாமல் திரிகிறார்கள். புலிகளுக்கு பலவருடங்களாக மாத, மாதம் காசுகொடுத்தவர்களில் கொஞ்சபேர் புலிமுகவர்களினால் கடைசியாக வீசிய மாய வலையில் சிக்காதவர்கள் கொஞ்ச பேர் காசு கடனெடுத்து கொடுக்காமல் தப்பித்துவிட்டார்கள். அவர்கள்தான் இன்னமும் புலிகளை பற்றி புகழ்ந்து பேசித் திரிகிறார்கள்.
கடைசிநேரத்தில் சுத்துமாத்து புலிமுகவர்களுக்கு பல ஆயிரக்கணக்கான பிறாங்குகள், டெலர்கள் என கடனெடுத்து கொடுத்தவர்களை நினைக்கும்போது ஒருவகையில் மனதுக்குள் சந்தோசமாக இருக்கிறது, கவலையாகவும் இருக்கிறது. இவர்களால் எத்தனை பேர் இறந்திருப்பார்;கள்.
சரி அதைவிட்டுவிடுவோம். தமிழன் என்றாலே சுத்துமாத்துக்காரன்தானே அவர்களில் புலம்பெயர் தமிழர்கள்தான் பயங்கரமான சுத்துமாத்துகாராகள் அதிலும் புலிபினாமிகள் உலகமகா சுத்துமாத்துக்காரர்கள். ஏன்என்றால் உலகில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானே அவ்வளவு பேரிடமும் காசை சுத்தியிருக்கிறாங்கள். இவங்களை மாதிரியானவர்களை அரேபிய நாடுகளில் கல்லால் கொல்வது போல் இவகளையும் கல்லால் எறிந்துகொல்லவேண்டும் அல்லது உயிரோடு கொழுத்தவேண்டும்.
அவங்கள், சனத்திடம் காசை மட்டும் ஏமாற்றி வாங்கவில்லை நகை, நட்டுகளையும் பலரிடம் ஏமாற்றி வாங்கிபோட்டாங்கள். இதில் இன்னுமொரு சோகமான விடயம் என்னவென்றால் புலிகளுக்காக வீடு வீடாய் காசு வாங்கி திரிந்தவர்கள் வாங்கபோன அந்த வீடுகளை வடிவாக நோட்டம் வைத்து, பின்பு அந்த வீடுகளில் சனநடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து அந்த வீட்டுகளுக்குள் நுழைந்து, அவ்வளவு பேரின் வீட்டு நகைகளையும் துடைத்து வழித்து களவெடுத்து கொண்டுபோய்விட்டார்கள்.
எனக்கு தெரிந்து முன்னர் புலிகளுக்கு காசுகொடுத்தவர்களின் மனைவிமார்கள் பலபேர் இப்ப தாலிக்கொடியில்லாமல் திரியினம்.
புலிப்பொடியல் வீட்டுக்கு வீடு காசுவாங்க நாலு அல்லது ஐந்து பொடியல் தான் ஒன்றாக சேர்ந்து போவார்கள். முன்னர் புலியாதரவாளர்களாக இருந்த வீட்டுகாரர்களும், வீட்டுக்காரிகளும் புலிபொடியளை கண்டால் அவையளுக்கு வாயால தேன் வடியும் அதனால வாங்க தம்பிமாரே என்றவுடன், அவையளும் வீட்டுகாரின் மனைவியை அக்கா என்று அன்பாக அழைப்பார்கள், புருசன்காரனை அண்ணே என்பார்;கள். அவரை அண்ணா என்றழைத்தால் அண்ணாவின் மனைவியானவளை அண்ணி என்றல்லவா அழைக்கவேண்டும்?
பெடியள் அக்காவில முதலில் கண்ணை வைத்திருவினம். அண்ணையைவிட பொடியளுக்கு அக்காவில்தான் பாசம்கூட. ஏன்என்றால் உடன்பிறந்த தம்பிகள்தானே?? அக்காவுக்கு ஆக வயதுபோன ஆள் என்றால் நைசா அவர்களின் மகளமார்; மேல கண் வைப்பினம். சில நேரம் வீட்டுக்கு வருகின்ற தம்பிமாரில் அக்காமாரும் புருசனைவிட பாசமாகிவிடுவினம். என்ன இழவோ தெரியவில்லை?
இப்ப யாராவது பொடியள் வீட்டுக்கு வந்து மணியடித்தால் அக்காமார் கதவு ஓட்டையால் பார்;த்துவிட்டு அப்பா, அப்பா யாரோ வந்து நிக்கிறாங்கள் நீங்க ஒருக்கா பாருங்கோ என்கிறார்கள். அக்காமாரும் விடிய எழும்பி வேலைகளுக்கு போய் பொடியளிடம் காசுகளை கொடுத்து கொடுத்து நல்லா ஏமாந்துபோய்விட்டினம்.
மாவீரர்கள் என்றால் யார்? தலைவர் இருக்கும்தனைக்கும் அப்பாவி பிள்ளைகளை ஆள்வைத்து பிடித்து தன்னுடைய பயங்கரவாத போர் நடத்திக்கொண்டிருந்தவர். வருடாந்த உரைநடத்துவதற்காகவும், அந்த தொகையை காட்டி வெளிநாடுகளில் இனவாத நஞ்சை தலையில் ஏற்றி வைத்திருப்பவர்களிடம் காசு பறிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பிள்ளைகளை பலி எடுத்தார், இப்படி தலைவரால் வீணாக பலிகொடுக்கப்பட்டவர்களா மாவீரர்கள்?
இவங்கள் கடந்த மூன்று சகாப்தகாலமாக அப்பாவிபிள்ளைகளை பலிகொடுத்து பிழைப்பு நடத்தியவபர்கள். பிரபாகரனுக்கு இறந்த பிள்ளைகளுக்கு மகாவீரர் பட்டம் கொடுப்பதற்கும், மகாவீரர் விழாவில் வந்து உரை நடத்துவதற்கும் என்ன தகுதியிருக்கிறது.
பிரபாகரன் உண்மையில் தமிழ் மண்ணுக்காக மாண்டுபோனவர்களுக்காக மரியாதைகொடுத்திருந்தால் தானும் போராடி இறந்திருக்கவேண்டுமல்லவா? ஆனால் பிரபாகரனோ கடைசிவரை தனது உயிரை காப்பாற்ற ஓடாத ஓட்டம் ஓடி பல ஆயிரக்கணக்கான மக்களையும் பலிகொடுத்து முள்ளி வாய்காலில் இராணுவத்திடம் அகப்பட்டு இறந்ததுதான் உண்மை.
சிலோன் தமிழர்களிடம் காசுவாங்கி பிழைப்பு நடத்திய நெடுமாறன் நெடுகசொல்லுகிறார் தலைவர் இருக்கிறாராம், வருவாரம் என்கிறார். சரி, தலைவர் வந்தால் எனிமேல் போராட்டம் நடத்துவதற்கு பிள்ளைகள் வேண்டுமே? வெளிநாடுகளில் இருந்து புலிகளுக்கு ஆதரவளித்தவர்களும், பணம் கொடுத்தவர்களும் தங்களுடைய பிள்ளைகளை தலைவரிடம் ஒப்படைப்பார்களா?
தலைவர் வன்னியில வைத்து வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை என வாங்கி போராட்டம் நடத்தியவர். பிறகு வீட்டில உள்ள எல்லாரும் வாங்கோ என பிடித்து சண்டைபோட்டவர்.
நான் வன்னி சனத்தை விசாரித்தவரை கடைசிகட்டபோரில் புலிகளுக்கும் சனத்துக்கும்தான் சண்டை நடந்ததாம். புலிபெட்டையள்தானாம் கூடுதலாக சனத்தை போகவிடாமல் பிடித்து வைத்திருந்தவர்கள். சனம் கொஞ்ச பொட்டையளை பிடித்து உயிரோடு வெட்டி கொழுத்தினார்களாம்.. அப்படியானால் சனத்தால் கொல்லப்பட்ட புலிகளும் மாவீரர்களா?
‘தலைவர் முப்பது வருடமாக ஆயுதம் வைத்திருந்து நடத்திய போராட்டத்தைவிட, தலைவரை காப்பாற்ற வெளிநாடுகளில் உள்ள புலியாதரவாளர்கள் நடத்திய மூன்று மாத காலமாக உலகம் முழுவதும் தலை கீழாக நின்று நடத்திய போராட்டம்தான் தலைவர் நடத்திய போராட்டத்தை விட பெரிய போராட்டம்.’
தலைவருக்காக தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியவர்கள்தான் மே மாதம் 18 திகதியிலிருந்து சிறிலங்காவுக்கு தொடர்சியாக போய்கொண்டிருக்கிறார்கள். இவங்கள்தான் பச்சை பொய்யனுகள். இந்த மகா துரேகிகளா மாவீரர்களுக்கு விழா எடுக்கபோகிறார்கள்? அல்லது மாண்டுபோன நம்மினப் பிள்ளைகளை பிணமாக்கி வெளிநாடுகளில் பெரும் பணமாக்கி பெரும் வாழ்வு நடத்துபவர்களா மாவீரர்களுக்கு விழா எடுக்கபோகிறார்கள்?
அன்பான புலம்பெயர் தமிழர்களே! அவதானம்! அவதானம்! இருங்கள.;
நன்றி. கி.பாஸ்கரன்
3 Comments.
Donnerstag, 18. November 2010
நாம் என்ன கொடுத்தோம்
ஜேர்மனிய அரசாங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு ஒருதொகை நூல்கள் அன்பளிப்பு.
By admin ( October 27, 2010 at 8:12 am) · Filed under செய்திகள்
கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்திலுள்ள ஜேர்மன் கலாச்சார நிலையமானது யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான வைபவம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றபோது அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை ஜேர்மனிய கலாச்சார நிலையப் பணிப்பாளர் பிஜோன்; கெட்டல்ஸ் இடமிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக் கொண்டார். மேற்படி நூல்களில் இலக்கியம் கலாச்சாரம் தத்துவம் போன்ற விடயதானங்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்ளடங்கியுள்ளமை விசேட அம்சம் என்பதுடன் இந்நூல்களின் மொத்தப் பெறுமதி இரண்டாயிரம் யூரோக்களாகும்.
இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஜேர்மனிய கலாச்சார நிலையப் பணிப்பாளர் பிஜோன்; கெட்டல்ஸ் பிரசித்திபெற்ற யாழ்.பொது நூலகத்திற்கு நூல்களை வழங்குவதில் ஜேர்மன் அரசின் சார்பாக தமது மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நாங்கள் மரங்களை அழித்தோம்
ஜனாதிதியின் 2ஆவது பதவிக்காலப் பதவியேற்பு, பிறந்த நாளை முன்னிட்டு 11லட்சம் மரக்கன்று நடும் திட்டம்.
By admin ( October 27, 2010 at 8:16 am) · Filed under செய்திகள்
சுற்றாடல் வளத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. Read the rest of this entry »
அறிவென்றொன்று…!?
பிரபாகரனே அத்தனைக்கும் காரணம்!
சொல்வது நாமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தமிழ் இணையம் ( புதினம் ).
எழுதியதும் நாமல்ல, நடேசன்,பாலசிங்கம்,தமிழ்ச் செல்வன் மற்றும் இன்ன பிற புலி முக்கியஸ்தர்களின் நெருங்கிய சகா “வழுதி”.
வழுதி இப்போது கிளப்பும் இந்தப் புழுதியை தமிழினத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எப்போதே கிளப்பியிருந்தார்கள், என்ன செய்ய? ஏற்றுக்கொள்ளத்தான் அவர்களுக்கு மனம் இருக்கவில்லை.
இப்போது காலங் கடந்து விட்டது, இதைத் தான் கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்றும் சொல்வது.
“புலித் தலைவர் சாகடிக்கப்பட்டார்” என்று மே 18 அன்றே முழு உலகமும் ஏற்றுக்கொண்டாலும், எஞ்சியிருந்த புலி முக்கியஸ்தர்களுக்கு அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதற்கு ஏறத்தாழ ஒரு மாதம் தேவைப்பட்டது.
இருக்கிறார், இல்லை எனும் சந்தேகத்தை வைத்து நெடுமாறன்,சீமான் வகையறாக்கள் காசு பார்த்துக்கொண்டிருக்க, யார் வீட்டுத் தோட்டத்தில் யார் பழந் திண்பது என்று சுதாரித்துக்கொண்ட புலிப்படை இனியும் இதை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து தம் தலைவர் மண்டை உடைத்து கொல்லப்பட்ட உலகறிந்த “பரகசியத்தை” உத்தியோகபூர்வமாக வழுதி வழியாக வெளியிட்டு புழுதியைக் கிளப்பியிருந்தது.
கிளப்பிய புழுதியில் சாட்டோடு சாட்டாக தமிழ்ச்செல்வனை சாடி அவரையும் ஏறக்குறைய “துரோகி” நிலையில் வைத்து புதினம் அழகு பார்த்த போது, இவர்களின் காட்டு மிராண்டித்தனத்தை “தமிழ்ச்செல்வனுமா துரோகி?” என்று தலைப்பிட்டு நாமும் ஒரு பதிவை மேற்கொண்டிருந்தோம்.
வழுதி கிளப்பிய புழுதியில் முத்துக்குளிக்கப் புறப்பட்ட சில தீவிர புலி ஆதரவாளர்கள், தம் தலைவன் இறந்த கதையை மறைப்பதோடு மட்டும் நின்று விடாமல், மறக்காமல் வழுதியின் பின்புலம், முன் புலம் அவரது கடந்த காலம், நிகழ் காலத்தையெல்லாம் ஆராய்ந்து அவருக்கும் “துரோகி” விலை போனவன், ஏமாற்றுக்காரன், புலித் தலைமையினால் தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட கோபத்திற்காக பழி வாங்குகிறான் என்றெல்லாம் வீர காவியங்களை பதிவிலிட்டார்கள்.
தன் வினை தன்னைச் சுடும்
தாம் வளர்த்தெடுத்த பட்டம் சூட்டும் கலாச்சாரம் தம்மையே சுடுவதை முதன் முறையாக உணர்ந்துகொண்டிருக்கும் புலியின் உயர் மட்டத் தலைவர்கள் கடந்த காலங்களில் தாம் விட்ட தவறுகளை அலச முன் வந்திருப்பது பாராட்டத்தக்க விடயமாக இருப்பினும், அலசலின் போது தாம் தப்பினாலும் வேறு யாரையாவது சாடியே ஆக வேண்டும் எனும் நிலையில் இந்தத் தடவை தேர்ந்தெடுத்திருப்பது அவர்களின் அதி மேதகு தேசியத் தலைவர் பிரபாகரனையாகும்.
பிரபாகரன் தான் தடை
அவர் மட்டும் அசைந்து கொடுத்திருந்தால் அத்தனையும் நடந்திருக்கும் எனும் தொனியில் வழுதியின் பிரச்சார விளக்கம் அமைந்திருப்பதானது பல உண்மைச் செய்திகளையும் சந்தர்ப்பவாதப் புலிகளின் முகங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது.
தமது மக்களுக்குத் தேவை விடுதலை என்பதை நன்குணர்ந்த தலைவராக பாலசிங்கம் இருந்திருந்ததையும் அவரை விரும்பாத பலர் அங்கிருந்தார்கள் என்பதையும் அதுவும் தமிழ்ச் செல்வனே இருந்தார் என்பதையும் வழுதி வலிந்துரைத்தாலும், தமிழ்ச் செல்வனைப் பேச வைப்பதெல்லாம் தலைவர் என்னும் அவர்களின் முன்னாள் விளக்கங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது பிரபாகரனுக்கும் பாலசிங்கத்திற்கும் இடையில் பாரிய சிந்தனை இடைவெளி இருந்திருப்பது புலப்படுகிறது.
எரிக் சொல்ஹைமிடம் தன் இறுதி நேரத்தில் பாலசிங்கம் : “பல்லாயிரக்கணக்கில சனங்கள் சாகப் போகுது, எரிக்; எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அப்பால் அந்தப் போராளிகள் ஒவ்வொருத்தரும் தமது மக்களின் விடுதலைக்காகப் போராட வந்த தூய உள்ளங்கள். அவங்களைக் காப்பற்ற நான் உயிரோட இருக்கமாட்டன்; என்ன செய்தாவது அந்த உயிர்களைக் காப்பற்றுங்கோ” என்று கேட்டுக் கொண்டாராம்.
இங்கே எடுக்கப்பட்ட முடிவுகள் என்று அவர் விளித்திருப்பது தன்னையும் தன் பேச்சையும் நம்பாமல் வன்னிக் காட்டிற்குள்ளிருந்து உலகத்தை ஆள நினைக்கும் பிரபாகரனின் முட்டாள்த் தனத்தைத்தான் என்பது தெளிவாகிறது.
தானும் சேர்ந்து ஊட்டி, குடித்து வளர்த்த புலிச் சித்தார்ந்தத்தினை நம்பி ஏமாந்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அநியாயமாகப் பலியாகியதே எனும் ஏக்கமும் அவரிடம் காணப்பட்டிருக்கிறது எனும் வழுதியின் கூற்று உண்மையாக இருந்தால் பாலசிங்கத்துக்கு கடைசி நேரத்திலாவது மேல் மாடியில் சரக்கு முளைத்திருக்கும் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனாலும், இந்த மேல்மாடியை காலியாக்கி வைத்துக் கொண்டு தானே ஈழ உணர்வு எனும் விளையாட்டிற்கு இவர் விளக்கமளிப்பதும், அதற்குத் தொண்டர்கள் கூடி விசிலடிப்பதுமாக மாவீரர் களியாட்டத்தை அதுவும் இவரே பிரதம பேச்சாளராக, விருந்தாளியாக இருந்து காலா காலம் அரங்கேற்றினார்? அது எதற்காக? மேல் மாடி காலியான தன் தம்பியை எதிர்த்து விட்டு தான் உயிரோடு இருக்க முடியுமா எனும் பயத்தாலா? இல்லை பிரபாகரனை எதிர்த்தால் தானும் துரோகியாக்கப்பட்டு விடுவேனே எனும் சுயநலத்தாலா?
இவையிரண்டுமே இல்லாவிடின் பிரபாகரனை வெளிநாட்டுக்காரர்களிடம் விமர்சித்து, அதற்கு தமிழ்ச்செல்வன் வாயிலாக “துரோகிப் பட்டம் பெற்று” பின்னர் வழுதியின் கூற்றுப்படியே நொந்து நொந்தே மாண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே?
அப்படி அவர் இறுதி நாட்களில் வருந்தியது தான் உண்மையென்றால் கருணா போன்றவர்கள் துரோகியாக்கப்பட்ட போது பாலசிங்கம் அதை விரும்பியிருக்க மாட்டார், விரும்பியும் விரும்பாமலும் அவரும் கருணாவிற்கு எதிராகக் கருத்தக் கூறினார் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, இவரும் ஏதோ ஒரு நிர்ப்பந்ததத்தில் தமிழ் மக்களை தவறாக வழி நடத்தினார், தவறான தலைமைக்குப் பயந்து சுயநலத்தோடு தம்மைப் பின்பற்றுவோர்களுக்கு “தூஷனப்” பேச்சுக்களால் தமிழீழம் காட்டி ஒட்டு மொத்த இனத்தின் உழைப்பையும் சுரண்டிய பாவிகள் பட்டியலில் அவரும் தானே தானாகச் சேர்ந்துகொள்கிறார்? இல்லை வழுதி தான் சேர்த்து விடுகிறாரா?
பாலசிங்கத்தையும்,பிரபாகரனையும் நேசிக்கும் ஒரு பக்கத்தில் இருந்து வழுதியைத் துரோகியாக்குவதா இல்லை வழுதியின் நியாயங்களில் இருந்து உண்மையில் பாலசிங்கத்தின் மேல் மாடி பிரபாகரனின் காலடியில் அடகு வைக்கப்பட்ட உண்மையை ஏற்றுக்கொள்வதா என்பதை புலி விசுவாசிகள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
நடு நிலையில் இருந்து அல்லது புலி சார்புக்கு வெளியிலிருந்து இவற்றை நோக்கினால் இவர்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிற முடிவு மிக விரைவாக மேற்கொள்ளப்படக்கூடியது.
இத்தனை சித்தார்ந்தத் தெளிவிருந்த வழுதி, அதுவும் புலியின் குரலான புதினத்தில் இத்தனை ஆளுமை நிறைந்திருந்த வழுதி இவ்வளவு காலம் எங்கே போனார்? தன் அறிவுக் கண்ணை எந்த அடுப்படியில் குளிர் காய வைத்திருந்தார் என்றும் மனித நேய விரும்பிகள் கேள்வி கேட்கலாம், அதற்கு அவரின் பதில் தலைவனை எதிர்த்து எதையும் பேச முடியாத கட்டுப்பாடான நிலை இருந்ததாக வரப்போகிறது.
அப்படியானால், உம் சொந்த மூளையையும் மனச்சாட்சியையும் தட்டிப்பறித்து உம்மை அடக்கி ஆண்ட சித்தார்ந்தம் தவறென்பதை நீர் இதுவரை சுட்டிக்காட்டாதது பாலசிங்கத்தையும் மிஞ்சிய சுய நலம் தானே?
இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் போது, புலி எனும் போர்வையில் மக்களைப் பற்றி கொஞ்சம் கூடச் சிந்திக்காமல் வழுதியால் குற்றஞ்சாட்டப்படும் அனைத்து தலைவர்களும், புலிச் சித்தார்ந்தத்தின் தலை பிரபாகரனும் சேர்ந்து மக்களை ஏமாற்றி வந்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்பது நன்கு புலப்படும்.
பாலசிங்கம், நடேசன்,வழுதி போன்றோர் நாட்டுப் பற்றுடன் மக்கள் நலன் கலந்தும் யோசித்தது உண்மையென்றால், பிரபாகரனும் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட தமிழ்ச்செல்வன் அன் கோவும் மக்கள் நலனைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்க மறுத்த மேல் மாடியில் எப்போதுமே தம் நலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த சுயநலவாதிகள் ஆவார்கள்.
அதிலும், பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள் அவரை சிந்திக்க விடவில்லை எனும் பழியைத் தூக்கிப்போட்டு அவர்களைத் துரோகியாக்கினால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
வெளிநாட்டுச் செய்திகள், தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கை கை விடல் முதல் அனைத்தையும் பிரபாகரன் தவிர்ந்த ஏனைய சக்திகள் தான் கிழித்தெறிந்தன, தடையாக இருந்தன என்று பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கில் புலி விசுவாசிகள் பேச முன் வருவார்களேயானால் நாம் ஏலவே பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டியபடி பிரபாகரன் என்பது “தமிழீழ” வியாபாரிகளுக்கு இலாபமீட்டுக் கொடுத்த ஒரு சந்தைப்பொருள், மதிப்பிருந்த விளைபொருள் மாத்திரமே.
மற்றவர்களால் ஆட்டுவிக்கப்பட்டு, இனித் தேவையில்லை என்று வரும் போது தூக்கி வீசப்பட்ட அல்லது காட்டிக்கொடுத்துக் கொல்லப்பட்ட தலையாட்டி பொம்மைதான் அது.
இதைச் செய்தவர்கள்,செய்து கொண்டிருப்பவர்கள் தான் அன்று தமிழ்ச்செல்வனையும் காவு கொடுத்தார்கள், அது தலைவரின் ஆசியுடன் நடைபெற்றிருந்தால் தலைவர் தன்னை மிஞ்சிய சிஷ்யன் ஒருவன் வெளி நாட்டில் இருப்பதை மறந்திருக்க வேண்டும், அது தலைவருக்கும் தெரியாமல் நடந்திருந்தால் தலைவர் வெரும் தலையாட்டி பொம்மையாகவே இருந்திருக்க வேண்டும்.
எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தம் சொந்த நிலங்களை விட்டுச் சிதறுண்டு உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழர்களும் சரி, சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் தவிக்கும் ஈழத் தமிழர்களும் சரி, இவர்கள் இரு சாராரும் “தமிழீழம்” எனும் மாய மான் கொண்டு ஏமாற்றப்பட்டார்கள் என்பதே இறுதியில் நிலைக்கும் உண்மையாகும்.
அதைச் செய்வதற்கு ஒரு அமைப்பு, அதன் இருப்பில் ஒரு அரச கட்டமைப்பு, பல வெளிநாட்டு செயற்படு பொறிமுறைகள் என்று அனைத்து வகையிலும் அனைத்து மக்களும் புலியால் ஏமாற்றப் பட்டுக் கொண்டே வந்தார்கள்.
யார் தியாகி? யார் துரோகி?
நிலைமை கட்டுப்பாட்டை மீறி் தலைவர் செத்துப் போனார் என்பதை நக்குணர்ந்து கொண்டு விரக்தியடைந்திருக்கும் எஞ்சியிருக்கும் திவிர புலி ஆதரவாளர்களுக்கு இரண்டு குழப்பங்கள் இருக்கின்றன.
1. தலைவர் நமக்குக் காட்டிக்கொண்டிருந்த தமிழீழ இராணுவ பிலிம் என்ன ஆனது?
2. தலைவர் இறந்தது உண்மையென்றால் அவரைக் காப்பாற்ற முடியாது போனது எதனால்? என்று இரு பெரும் குழப்பங்களாகும்.
வெறும் இரும்புத் துண்டங்களை வாங்கிக் குவித்த தமிழீழத் தேசியத் தலைவருக்கு மனோ தைரியம் உள்ள விடுதலைப் போராளிகளை உருவாக்கவோ, அல்லது இருந்தவர்களைத் தக்க வைக்கவோ முடியாமல் போனதுதான் முதலாவது குழப்பத்திற்கான தெளிவான விடை.
அதன் உப காரணம் என்னவென்று பார்த்தால் அங்கே தலைவரின் சுயநலமும்,வங்குரோத்து புத்திசாலித்தனமும் தெளிவாக வரும். எனவே அதை தீவிர புலி ஆதரவாளர்கள் இப்போதைக்கு செய்ய மாட்டார்கள்.
இரண்டாவது காரணத்தில் தீவிர புலி ஆதரவாளர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கிறது, காரணம் சூப்பர் மேன் பிரபாகரனை யாராவது காட்டிக்கொடுத்து, அருகில் இருந்து முட்டாளாக்காமல் அவர் செத்திருக்க மாட்டார் என்பது அவர்கள் அடிப்படை நம்பிக்கை.
அந்த நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கும் விதமாக தலைவரின் மண்டையில் பெரிய வெட்டுக் கொத்து வேறு காணப்படுகிறது, எனவே தலைவரை “இருங்கோ நாங்க காப்பாற்றுவோம் என்று சொல்லி யாரோ மாட்ட வைத்து விட்டான்” என்று முட்டிக்கொள்ளலாம்.
அதற்குக் கிடைக்கும் ஒரே இலக்கு பத்மநாதன், எனவே நம்ப வைத்துக் கழுத்தறுத்த பதமநாதன் துரோகி தான் என்று தம் நிலையைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் பத்மநாதனை ஆதரிக்கும் வழுதி சார்ந்த புதினங்களோ யார் என்னதான் சொன்னாலும் தலைவன் தான் அடம் பிடித்தான் அவன் மேல் மாடிதான் காலியாக இருந்தது, மாறி வரும் உலகை அவதானிக்கத் தவறியது, தன் சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க மறுத்தது என்று அடித்துக் கூறுகிறது.
இந்தக் கோணத்தில் பார்த்தால் பிரபாகரன் தான் அத்தனைக்கும் காரணம்.
புலியின் ஆக்கத்திற்கும் பிரபாகரன் தான் காரணம் இன்று அவர் சார்ந்த அழிவிற்கும் அவரே தான் காரணம் என்று கதையை முடித்து விட்டால் எஞ்சியிருக்கும் பத்மநாதன்கள், ருத்திர குமரர்கள் புனிதர்களாக மாறிவிடலாம்.
அப்படிப் பார்த்தால் கருணாவும் இதைத்தானே கொஞ்ச நாட்களுக்கு முன்னதாகச் சொன்னார்? பிரபாகரன் யார் பேச்சையும் கேட்பதில்லை, தேவையில்லாமல் முரண்டு பிடிப்பார் என்று அவரும் தானே சொன்னார்? அப்போ அவர் துரோகியென்றால் வழுதி,பம்நாதன்களும் துரோகிகள் தானே?
சரி, அந்த வாதத்தை எஞ்சியிருக்கும் தீவிர புலி ஆதரவாளர்களிடம் விட்டு விடலாம், இனி அடுத்து என்ன? என்று கேள்வி கேட்டால் இப்போது எஞ்சியிருக்கும் வெளிநாடு வாழ் புலிகளின் முக்கிய போராட்டம் புலியின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கான போராட்டமாகும்.
அதை நார் நாராகப் பிரித்துப் பங்கிட்டுக் கொள்ளும் வரை நாடு கடந்து தமிழீழத்தை வாழ வைப்பார்கள், அதற்காக பல தலைவர்கள், புத்திஜீவிகள் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பாலசிங்கத்தின் பாசையில் மேல்மாடி காலியானவர்கள் வந்துகொண்டிருப்பார்கள்.
மக்களின் மேல்மாடியில் தமிழீழப் பனி மேகத்தை இறக்கி வைத்து விட்டு இவர்கள் 200 கி.மீ வேகத்தில் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்வார்கள்.
இது என்ன கூத்து என்று யாரும் கேள்வி கேட்க முன்னராகவே தலைவர் எல்லாவற்றையும் ஈசனோடு வானலோகத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார், தமிழீழம் கிடைத்ததுமே உடனடியாக விசா எடுத்து நெடுமாறனிடம் சொல்லி ஒரு தனி விமானத்தில் ஏறி வை.கோ வின் ஆதரவோடு பயணித்து சீமான் விட்டு முற்றத்தில் தரையிறங்குவார், அதைப் பாரதிராசா மறக்காமல் படம் எடுப்பார் என்று மெகா சீரியலை அவிழ்த்து விட்டுவிடுவார்கள்.
இன்டர்நெட் புலிகளும் தேனிசைச் செல்லப்பாவை வைத்து புலி வரும் புலி வரும் என்றொரு வீரப் பாடலையும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று ரீமிக்ஸ் பாடலொன்றையும் வெளியிடுவார்கள்.
ஒரு மறு மலர்ச்சிக்காக வேண்டுமானால் புலிக்கொடியை 3டியில் வடிவமைத்து தம் இணையங்களுக்கு புதிய நிறமும் தீட்டி புதுப் படம் ஓட்டலாம், ஆனால் சரக்கென்னவோ பழைய சரக்காகவே இருக்கும்.
கருமம் இந்த நேரத்தில் ஒரு புரட்சிக் கவிதை எழுத ரத்தினதுரையும் இல்லை அவர் இப்போது சிங்களக் கவிதை எழுதப் பழகிக்கொண்டிருப்பார், ஏனெனில் தான் சார்ந்த சித்தார்ந்தம் மக்களுக்கு எதைக் கொடுக்க முடியும் என்று தெரிந்தும் தன் சுய இருப்பை தமிழீழத்தின் தேசிய கவிஞராக இருப்பதற்குத் தானே அவரும் எழுதினார், இப்போது தமிழீழமும் இல்லை அதற்காகக் போராடப் போய் அநியாயமாக உயிரிழந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் தவிர இருப்பர்வகள் எல்லோரும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக இப்போது யாரை யார் முந்திக்கொண்டு துரோகியாக்குவது என்று அலைகிறார்கள், இதில் இனி அவருக்கு என்ன வேலையிருக்கிறது? நிம்மதியாக மஹிந்தவை கவர்ந்துகொள்ள சிங்களக் கவிதைகள் எழுதிப் பழகட்டும்.
கறை படியாத கைகள் எனும் நினைப்பில் காவு கொடுக்கப்பட்ட உயிர்கள் தான் தம் தலைவனை தவறாக வழி நடத்தியது என்று மட்டுந்தான் சொல்வார்கள் என்று பார்த்தால் அந்த மூளை கெட்ட பிரபாகரன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் புலியின் போக்கு எங்கேயே இருந்திருக்கும் எனும் தொனியில் புலியின் இக்கால முக்கியஸ்தர்கள் புளுடா விடுகிறார்கள்.
பிரபாகரன் இல்லாமலிருந்திருந்தால் புலி எனும் அமைப்பும் தான் இருந்திருக்காது, நீங்களும் தான் இருந்திருக்க மாட்டீர்கள். எனவே பிரபாகரன் அழிந்த உண்மையை ஏற்றுக்கொண்டதன் பின்னும் உங்களுக்கு மக்கள் முன் வந்து நியாயங் கற்பிக்கவும், அவர்களை ஒன்று திரட்டவும் என்ன தேவை இருக்கிறது?
பிரபாகரன் பெயரால் சுருட்டி வைத்திருக்கும் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளும் வரை நாடு கடந்த தமிழீழம் நடத்துவது தானே உங்கள் தேவை? அதிலும் ஓரளவு வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும், ஏனெனில் காலியான மேல் மாடியை புலி ஆதரவாளர்கள் நிரப்புவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும்.
நீங்கள் நியாயவாதிகள் அதுவும் மக்கள் நலன் சார்ந்த நியாயவாதிகள் என்றால் பிரபாகரன் உயிரோடு இருக்கும் போதே அல்லவா அவரைத் திருத்தியிருக்க வேண்டும்? அவரைக் கொன்று விட்டு இனறு அவரையும் துரோகியாக்கி விட்டு அவரால் வளர்க்கப்பட்ட தமிழீழக் கனவில் எஞ்சியிருக்கப் போவது என்ன என்று பார்த்தால் அது என்னவாக இருக்கும்? என்பது சிறு பிள்ளைக்கும் இனித் தெளிவாகப் புரியும்.
புழுதி கிளப்பிய பின் தன்னைத் துரோகியென்று சொல்லும் மக்களுக்கு முன் மகாத்மா வழுதி அனைத்தையும் தாங்கி வந்து முன் நின்று விளக்கம் கொடுக்கிறார் என்றால் அவருக்கு தமிழ் மக்கள் மீது எவ்வளவு பாசமும் நேசமும் இருக்க வேண்டும்? கருமம் இது அப்போது இருந்திருந்தால் தலைவரின் தலையாவது தப்பியிருக்குமே?
அப்போது வாய் திறந்திருந்தால் துரோகியிருப்போம் என்னும் பய உணர்வால் இப்போது வாய் திறக்கிறீர்களா? இப்போதும் நீங்கள் எல்லாம் துரோகிகள் என்று புலிப் பாணியில் தீர்ப்பு சொல்வதற்கில்லை, ஆனால் அப்போதும்,இப்போதும்,எப்போதும் நீங்கள் அனைவருமே மக்கள் விரோதிகள் என்பதை மக்கள் இனிப் படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள்.
அரசியல் பிரிவு,வெளிநாட்டுப் பிரிவு,புலனாய்வுப் பிரிவு அந்தப் பிரிவு இந்தப் பிரிவு என்று திரை மறைவில் இருந்து கொண்டு இன்டர்நெட் புலிகள் நடத்தித் தொலைத்த விபச்சாரம் நீங்கள் கொண்டு வந்த அதே அறிவழகனை முதலில் நம்பி, பின் அவரும் விலை போன துரோகியானார் என்று வீர முழக்கமிடும் வரை ஓயவில்லை.
அதையும் நீங்களே எடுத்துக் கூறுகிறீர்கள், இது தான் கிடைக்கும் என்று தெரிந்த பின்னும், அதுவும் உங்கள் பழைய விளக்கவுரையின் படி தலைவனை அம்போ என்று விட்டு விட்டு ஓடி வந்து உங்களிடமும் தகவல் சொன்ன சில புலனாய்வுப் பிரிவுப் புலிக் கதையையும் சேர்த்துப் பார்க்கும் போது எதைச் செய்தால் என்ன பரிசு கிடைக்கும் என்று நடேசனை விட நன்குணர்ந்தவர்கள் வெளிநாட்டில் புலிப் பணத்தில் குளிர்காய்ந்த உங்கள் போன்றவர்கள் தான்.
அதையும் மீறி, நீங்கள் இன்னும் இன்னும் புனிதர்களாக மாறி மக்கள் முன் வர முயற்சிப்பது என்ன காரணத்தினால்? அதற்கு கே.பியைத் தலையாக்கி அணி திரள முனைவது எதனால் என்பதெல்லாம் இனி வரும் காலத்தில் அம்பலமாகப் போகும் உண்மைகள்.
மக்கள் விரோதிகளான இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டப் பட வேண்டியவர்கள்.
இவர்களின் தலையீடு இல்லாத ஒரு ஈழச்சமூகம் கடந்த காலத்தில் மீட்சி பெற்றிருக்கும், அதுதான் முடியாமல் போய்விட்டது. இந்தக் குள்ள நரிகள் அறிந்து அகற்றப்பட்டால் இனியாவது மீட்சி பெறலாம்.
இவர்களது குடுமிச் சண்டையில் அங்கே இன்றளவும் அல்லல் படும் மக்களை யாரும் மறந்து விட வேண்டாம்.
உயிர் வாழும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டும், நம்மால் முடிந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்யும் மனமும் ஒவ்வொருவருக்கும் தானாக வர வேண்டும்.
யாரையும் நம்பி யாருக்குப் பின்னாலும் திரிந்து யாருக்கு ஊடாகவும் உங்கள் உழைப்பை வீணாக்குவதை விட உங்கள் சொந்தக் கண்களால் பார்த்து உங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வழிகளில் அந்த மக்களைச் சென்றடையக் கூடிய உதவிகளை, ஆறுதலை வழங்குங்கள்.
அவர்கள் விழிப்புணர்வு பெற்ற, நல் வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நீங்களும் சேர்ந்தே அதற்காக உழையுங்கள், நம்புவோம் இந்தப் புலிக் கொடுமை இல்லாத நல்லதொரு சமூகம் நாளை ஈழத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் என !
Puthinam News
vanakkam–baskaran
kanakalam nakkal kaddurai onraijum kanalai
kanamal poi viddinka entu ninaithen
nakkal kadduraikal miindum aarampam
தண்டவாளத்திலை தலை வைத்துப் படுத்தால் அவன் வீரத் தமிழன் என்று சொல்லுறங்கள். எங்கடை பெடியல் தண்டவாளத்தைக் கழற்றிக் கொண்டு ஓடினவர்கள் அல்லவா?!!? அப்ப அவர்கள் மாவீரர்கள் தானே!!?
very good baskaran.thanks again